Engaging New Businesses Through Smart Approach
தமிழ்நாட்டின் முதல் வணிக நெட்வொர்க் தளமாக வினையம் அமைப்பு தொடங்கிய நாள் 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்.
ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு மேல் தமிழர்களின் வணிக சாத்துக்கள் அதாவது TRADE மறைந்து போயின. வணிக சாத்துக்கள் என்பது தமிழர்கள் 500 பேர் ஆயிரம் பேர் குழுவாக உலகம் முழுவதும் கடல் வழி சென்று வணிகம் செய்வார்கள்.
விஜயநகர ஆட்சியில் கடல் வணிகம் தடைப்பட்டு தமிழர்களின் வணிக குழுக்கள் மறைந்தே போயின. அதை மீண்டும் தமிழகத்தில் உயிர்ப்பித்தது நமது BNT வினையம் அணி தான். உலகத் தமிழர்களின் வணிகத் தளத்தின் முன்னோடி நம்பிக்கை நட்சத்திரம் BNT வினையம் அணி என்றால் மிகையாகாது.
2014இல் தொடங்கிய காலத்தில் நமது வினையம் அணி CITACIS என்ற அமைப்பில் இருந்தது. CITACIS தலைமை நிதி மேலாண்மையில் நெறி தவறியதால், நமது வினையம், ஆக்கம், வாகை, துளிர், மெய்ப்பொருள் ஆகிய அணிகள் 10/04/2019 முதல் BNT என்ற புதிய அமைப்பை தோற்றுவித்தன. அது முதல் BNT அமைப்பானது தமிழர் வணிக தளத்தில் புதிய தரத்தினையும், NETWORK STANDARD ஏற்படுத்தியும், புதிய உத்திகளை கையாண்டும் தமிழர் வணிகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சென்னைக்கும், பெங்களூருக்கும் வணிக பாலம் அமைத்து,பெங்களூர் தமிழ் தொழில் முனைவோர்களை இணைத்து ஒரு நாள் பட்டறை நடத்தியது. இன்றைக்கு பெங்களூர் தமிழ் தொழில் முனைவோர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் மாநிலம் தாண்டி வணிகம் செய்கிறார்கள்.
அதேபோல் பாண்டிச்சேரி தமிழ் தொழில் முனைவோர்களுடன் இணைந்து நடத்திய NETWORK MEETING வெற்றிகரமாக அமைந்தது.
நமது BNT வினையம் அணியின் சாதனைகளை அதன் தலைமையே சாத்தியப்படுத்தியது. திரு. சேனாதிபதி, திரு. ராஜேந்திரன், திரு. நம்பி ஆருரன், திரு. உமாசங்கர், திரு. பொன்னப்பன், திரு. ராஜசேகர், திரு. சரவணன், திரு. ஜெயராமன், திரு. மீரான் ஆகியோர்கள் இதை சிறப்பாக தலைமை தாங்கி நடத்தியவர்கள்.
இத்தகைய வளர்ச்சி போக்கில் வினையம் அணி முதன்முறையாக தனது 200 – வது வாரத்தை THE PARK ஓட்டலிலும் சிறப்புற நடத்தியது. அதனைத் தொடர்ந்து 250 – வது வாரத்தை THE RAIN TREE ஹோட்டலில் தொடர்ந்து நடத்தியது. 300 – வது வாரமும் 350 – வது வாரமும் கொரோனா தொற்று பரவிய காலமாதலால் தடைப்பட்டது. மீண்டும் 400 – வது வாரம் GREEN PARK ஓட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 450 ஆவது வாரத்தினை அடையாறு RAJ PALACE ஹோட்டலில் சிறப்பாக வினையம் அணி நடத்தியது.
இன்று 500 வது வாரத்தினை இன்றைய தலைமையும், அணியும் FEATHERS ஹோட்டலில் சிறப்புற நடத்துகிறது.
வினையம், ஆக்கம் அணிகள் முன்னின்று நடத்திய இஸ்லாமிய பொங்கல், நல்லிணக்க பொங்கல் ஆகிய நிகழ்வுகள் தமிழர்களின் சமூக பயணத்தில் புதிய முயற்சியாக பார்க்கப்பட்டது. பொங்கல் திருவிழாவினை ஒட்டுமொத்த தமிழர்களும் இஸ்லாமிய தமிழர்கள், கிறிஸ்தவ தமிழர்கள், இந்து தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தும் நிகழ்வாகமாற்றியது. பொங்கல் விழாவினை நடத்துவதில் ஆக்கம் அணியின் அனுபவங்கள் குறிப்பிடத்தக்கது.
வருகின்ற ஆண்டில் பல புதிய முயற்சிகளை BNT கையாள இருக்கிறது. தமிழகத்தின் பண்பாட்டு தளத்திலும் வணிகத்தளத்திலும் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்.
Key Stats That Drive Our Success!
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.
00K
Downloaded
00K
Feedback
00+
Workers
00+
Contrubutors