About Founder

shape
shape
shape
shape
shape
shape
shape
shape

நிறுவனர் திரு. சதாசிவம் ஐயா அவர்களின் தொடர் முயற்சியினால் உருவான இந்த பிசினஸ் நெட்வொர்க் ஆப் தமிழ் என்று அழைக்கக்கூடிய தமிழர் தொழில் வணிக இணையுரு குழுமத்தின் வளர்ச்சிக்கு அரும் பங்காற்றிய நிறுவனர் திரு சதாசிவம் அவர்களின் அயராத உழைப்பினை காண்போம்.

சதாசிவம் ஐயா அவர்கள் நாம் அமைப்பின் மூலமாக அதில் உள்ள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து முதல் முறையாக 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வணிக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் நோக்கம் அடுத்து வரும் சந்ததியினருக்கு தொழில் செய்வதற்கு எளிதான ஒரு இடமாக இந்த தமிழகத்தை ஏற்படுத்த வேண்டும், என்ற நல்ல நோக்கத்தில் அயராது உழைத்து இன்று எட்டு குழுக்களை உருவாக்கி கொண்டு வந்திருக்கிறார். இந்த வணிகக் குழுக்களை நடத்திக் கொண்டு மேலும் பல ஆளுமைகளை இந்த குழுவிற்கு தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வைத்துக் கொண்டே இருந்தார்.

வணிகம் சார்ந்து பல ஆளுமைகளை அறிமுகம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் மேலும் இந்த தமிழ் மண்ணில் நடக்கக்கூடிய அநாகரிக செயல்களையும் கையில் எடுத்து அவைகளை ஒழுங்கு படுத்தினார்.

அதில் ஒன்று முல்லைப் பெரியார் அணையில் நீர் தேக்கத்தை உயர்த்துவதை கண்டித்து கேரளா அரசு தடை விதித்தது. அந்த தடையை உடைக்கும் நோக்கில் இங்கு உள்ள சிவில் இன்ஜினியர்களை அரசின் அனுமதியோடு அழைத்துக் கொண்டு அந்த முல்லைப் பெரியாறு அணையின் தரத்தை சோதனை செய்து அந்த சோதனையின் விடையத்தை நீதி மன்றத்தில் ஒப்படைத்து நீதிமன்றத்தின் மூலமாக 152 அடி உயரம் நீரை தேக்க கூடிய அளவிற்கு இந்த அணை தகுதியான அணை என்று நிரூபித்துநீதிமன்ற ஆணையை பெற்றார்.

ஒவ்வொரு வாரமும் ஒரு ஆளுமையை சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து கொண்டே இருந்தார், 18 மாத காலம் கடந்ததும் ஒரு சிலர் மட்டும் மற்ற இனத்தவரும் இந்த அமைப்பில் உறுப்பினராக சேர்க்கலாம், என்று கருத்து தெரிவித்த போது எதிர்ப்பு தெரிவித்து மாற்று இனத்தவர் இந்த குழுவில் இடம் பெற முடியாது என்று அந்த குழுக்களில் இருந்து வெளியேறி தற்போது தொடர்ச்சியாக மாற்று இனத்தவர் இல்லாத எட்டு குழுக்களை உருவாக்கி இன்று வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஐயா அவர்களுக்கு நம்முடைய அனைத்து உறுப்பினர்களும் தலை நிமிர்ந்து பாராட்டி மகிவோம். இந்த அமைப்பு 2014 ஏப்ரலில் தொடங்கப்பட்டது அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு தை மாதத்தில், தைப்பொங்கலை நல்லிணக்க பொங்கலாக இஸ்லாமியர் கிருத்துவர் இந்துக்கள் அனைவரும் சேர்ந்து பொங்கல் வைக்கும் விழாவாக தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வந்திருக்கிறார்

இந்த வினையம் குழு தான் இந்த ஒட்டுமொத்த குழுக்களின் தாய் கழகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது, அதேபோல் இந்த வினையம் குழுவில் மட்டும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய தலைவர், செயலாளர் பொருளாளர்களை நியமித்து இன்று வரை விடாமல் ஜனநாயக முறையில் ஐயா அவர்களின் தலைமையில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர்களை பொறுப்பாளர்களை உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள் அதன் அடிப்படையில் ஐயா அவர்கள் சிறந்த முறையில் இந்த குழுவை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அடுத்த கட்ட முயற்சியாக வெளிமாநிலங்களில் இருக்கக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியில் இறங்கி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக பெங்களூரில் எலக்ட்ரானிக் சிட்டி என்ற தொழில்துறை சார்ந்த இடத்தில் வணிக கூட்டம் ஏற்பாடு செய்து 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும், BNT – ல் 40 நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தி அதனால் சிறப்பான வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் 70-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து BNT- ல் 30க்கும் மேற்பட்ட தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து கூட்டத்தை சிறப்பாக நடத்தினார் புதிய குழுவை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த கால கொரானாவுக்கு அடுத்து 400 வது கூட்டம் சிறப்பான முறையில் கிரீன் பார்க் ஓட்டலில் சிறந்த முறையில் நடத்தப்பட்டு, அடுத்த தலைமை 450வது கூட்டம் ராஜா அண்ணாமலைபுரத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது. தற்போது 500 -வது கூட்டம் சிறப்பான முறையில் இந்த ஃபெதர் ஓட்டலில் சிறப்பான முறையில் நடத்துவதற்கு ஐயா அவர்களின் தலைமையில் இப்பொழுது உள்ள வினையம் தலைமமை அனைவரும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துள்ளனர், அதை நீங்கள் இப்பொழுது கண்டு கொண்டிருக்கிறர்ீகள் இவை அனைத்தும் நம்முடைய நிறுவனர் ஐயா திரு சதாசிவம் ஐயா, அவர்களின் உழைப்பால் நடந்து கொண்டிருக்கிறது.

ஐயாவின் அகவை 60க்கும் மேல் இருந்தாலும் நம்மை விட இளைஞராக செயல்பட்டு சுற்றி திரிந்து இந்த உலகத்தில் இவ்வளவு பெரிய வாய்ப்பினை நமக்கு தந்து கொண்டிருக்கிறார் தரப்போகிறார். ஐயாவை பயன்படுத்துவதற்கு நாம் அனைவரும் தயாராக இருப்போம் ஐயா அவர்களை வணங்கி தலை நிமிர்ந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்

Key Stats That Drive Our Success!

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua.

00K

Downloaded

00K

Feedback

00+

Workers

00+

Contrubutors

Have any question about us?

Don't hesitate to contact us

Contact Us